தமிழகம் முழுவதும் இன்று 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், சென்னையில் 1,257, செங்கல்பட்டில் 120, திருவள்ளூரில் 50, காஞ்சிபுரத்தில் 40, மதுரையில் 33, தூத்துக்குடியில் 38, திருவண்ணாமலையில் 33, ராணிப்பேட்டையில் 37, வேலூரில் 21, நெல்லையில் 25, கடலூரில் 27, தஞ்சையில் 12, விழுப்புரத்தில் 13, அரியலூரில் 1, கள்ளக்குறிச்சியில் 12, சேலத்தில் 3, திண்டுக்கல்லில் 2, கோவையில் 3, விருதுநகரில் 9, திருச்சியில் 8 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேனியில் 11, தென்காசியில் 8, திருவாரூரில் 10, கன்னியாகுமரியில் 5, திருப்பூரில் 2, நாகப்பட்டினத்தில் 10, கரூரில் 1, சிவகங்கையில் 9, புதுக்கோட்டையில் 11, திருப்பத்தூரில் 1, கிருஷ்ணகிரியில் 2, நீலகிரியில் 3 என மொத்தம் 32 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 41 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் 11, கர்நாடகாவில் 4, கேரளாவில் 3, ராஜஸ்தானில் 2, ஒடிசா மற்றும் உ.பி-யில் இருந்து தமிழகம் வந்த தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஸ்கட் மற்றும் கத்தாரில் இருந்து தமிழகம் வந்த தலா 4 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மலேசியா 2, தோஹா, துபாய், ஐக்கிய அரபு அமீகரத்தில் இருந்து தமிழகம் வந்த தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது.