தமிழகம் முழுவதும் 2வது நாளாக இன்றும் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 919, செங்கல்பட்டில் 88, திருவள்ளூரில் 52, காஞ்சிபுரத்தில் 47, திருவண்ணாமலையில் 65, விழுப்புரத்தில் 18, நாகையில் 43, ராணிப்பேட்டையில் 76, மதுரையில் 20, கடலூரில் 11, வேலூரில் 16, ராமநாதபுரத்தில் 18, திருச்சி மாற்று திண்டுக்கல்லில் 14, நெல்லையில் 18, திருவாரூரில் 10, தென்காசியில் 13, விருதுநகரில் 8, அரியலூர், தஞ்சாவூர் மற்றும் தேனியில் தலா 4,
கள்ளக்குறிச்சியில் 7, கன்னியாகுமரியில் 6, சேலத்தில் 5, நாமக்கல்லில் 3, கோவை, தருமபுரி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கையில் தலா 2 பேர், கரூரில் 1, தூத்துக்குடியில் 1, திருப்பூர் 1 என மொத்தம் 32 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக இன்று கொரோனா தொற்று இல்லை. பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 59 பேருக்கு கொரோனா இன்று உறுதியாகியுள்ளது.
அதில், மகாராஷ்டிராவில் 25, கர்நாடகாவில் 5, ராஜஸ்தானில் 10, டெல்லியில் 4, உத்தரபிரதேசத்தில் 3, ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசிய மற்றும் கத்தாரில் இருந்து வந்த தலா ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .