Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 89,532 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,09,448 ஆக இருக்கின்றது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 46,969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்று ஒரு மாவட்டம் விடாமல் 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது.

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :

அரியலூர் 4

செங்கல்பட்டு 245

சென்னை 1168

கோவை 117

கடலூர் 16

தர்மபுரி 13

திண்டுக்கல் 31

ஈரோடு 20

கள்ளக்குறிச்சி 65

காஞ்சிபுரம் 385

கன்னியாகுமரி 104

கரூர் 5

கிருஷ்ணகிரி 7

மதுரை 319

நாகப்பட்டினம் 6

நாமக்கல் 12

நீலகிரி 5

பெரம்பலூர் 1

புதுக்கோட்டை 45

ராமநாதபுரம் 73

ராணிப்பேட்டை 46

சேலம் 98

சிவகங்கை 74

தென்காசி 17

தஞ்சாவூர் 36

தேனி 115

திருப்பத்தூர் 25

திருவள்ளூர் 232

திருவண்ணாமலை 149

திருவாரூர் 11

தூத்துக்குடி 136

திருநெல்வேலி 123

திருப்பூர் 3

திருச்சி 103

வேலூர் 151

விழுப்புரம் 4

விருதுநகர் 246

Categories

Tech |