சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏசி மூலம் 3 வெவ்வேறு குடும்பத்தினருக்கு பரவியது தெரியவந்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் குறித்து சீனாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட மூன்று வெவ்வேறு குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குவாங்சு பகுதியில் இருக்கும் ஹோட்டலில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மற்ற இரண்டு குடும்பத்தினர் அங்கு வந்துள்ளனர், அப்போது ஏசி இயங்கிக் கொண்டிருந்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டவரின் தும்மல் அல்லது இருமல் மூலம் அவர்களுக்கு பரவி இருப்பது தெரியவந்துள்ளது. முழுவதும் மூடப்பட்ட ஏசி அறையில் ஒருவரிடமிருந்து 10க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.