தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த இரு நாட்களில் உயிரிழப்புகள் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 82 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. மேலும்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக நேற்றும், இன்றும் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% என்ற நிலையிலேயே உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.