Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 1,392, செங்கல்பட்டில் 182, திருவள்ளூரில் 105, காஞ்சிபுரத்தில் 33, திருவண்ணாமலையில் 26, கடலூர், நெல்லை மற்றும் விழுப்புரத்தில் தலா 7, தூத்துக்குடியில் 24, மதுரையில் 10, கள்ளக்குறிச்சியில் 4, சேலத்தில் 2, திண்டுக்கல்லில் 3, கோவையில் 1, விருதுநகரில் 5, ராணிப்பேட்டையில் 25, தஞ்சையில் 2 இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேனியில் 9, திருச்சியில் 12, ராமநாதபுரத்தில் 8, வேலூரில் 11, கன்னியாகுமரியில் 10, நாகப்பட்டினத்தில் 4 நாமக்கல்லில் 4, ஈரோட்டில் 1, திருவாரூரில் 14, சிவகங்கையில் 2, கிருஷ்ணகிரியில் 1, புதுக்கோட்டையில் 5, தர்மபுரியில் 4 என மொத்தம் 30 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 26 பேருக்கு கொரோனா இன்று உறுதியானது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 8 பேர், டெல்லி, கேரளா, கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்த தலா 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய 4 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

குவைத்தில் இருந்து வந்த 2 பேர், சவுதி அரேபியா மற்றும் மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்த தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து 36,841 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Categories

Tech |