ஒடிசாவில் உலா ஜாஜ்பூரில் இன்று புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. தற்போது 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 55 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திரிபுராவில் அம்பாஸாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுராவில் மொத்த எண்ணிக்கை 4ஆக உள்ளன. ஏற்கனவே 2 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கையை 2720 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை, குணமடைந்தவர்களில் 714 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 நபர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 150ஆக உள்ளது. மேலும் 48 நோயாளிகள் இன்று வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் 37 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 39வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதனால் ஊரடங்கு உத்தரவானது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.