தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை – 1,484, அரியலூர் – 1, செங்கல்பட்டு – 136, கடலூர் – 12, தருமபுரி – 2, திண்டுக்கல் – 9, கள்ளக்குறிச்சி – 11, காஞ்சிபுரம் – 22, கன்னியாகுமரி – 10, கரூர் – 5, மதுரை – 15, நாகை – 1, பெரம்பலூர் – 2, ராணிப்பேட்டை – 2, சேலம் – 3, சிவகங்கை – 13, தென்காசி – 3, தஞ்சை – 10, திருப்பத்தூர் – 2, திருவள்ளூர் – 78, திருவண்ணாமலை – 49 பேர்,
திருவாரூர் – 14, தூத்துக்குடி – 28, நெல்லை – 15, திருச்சி – 6 , விழுப்புரம் – 10, விருதுநகர் – 1, வேலூர் – 13 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.