Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இத்தாலி சென்று திரும்பிய 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – ஆய்வில் உறுதி!

கேரளத்தில் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 3 வயதுக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கேரளத்தில் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 3 வயதுக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் மட்டும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்த குழந்தை தனது பெற்றோருடன் இத்தாலி சென்றுவிட்டு மார்ச் 7ம் தேதி கேரளம் திரும்பியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த குழந்தையின் குடும்பத்தோடு தொடர்பில் இருந்த 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்கான முடிவுகள் இன்னும் தெரியவரவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் உச்சபட்ச எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |