ஆப்பிரிக்காவின் மடகாஸ்கரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டில் கோவிட் ஆர்கானிக்ஸ் என்ற கசப்பான மருந்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் ரிஜாசோவா ஆண்ட்ரியமனனா என்பவர், மாணவர்கள் சாப்பிடும் கொரோனா மருந்து மிகவும் கசப்பாக உள்ளது எனவே மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று லாலிபாப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த திட்டத்திற்கு இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 15 கோடி செலவிடப்படும் என்றும் அறிவித்தார். இத்திட்டத்தினை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா லாலி பாப் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததார். அதோடு மட்டும் விட்டுவிடாமல் கல்வி அமைச்சர் ரிஜாசோவாவை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டு அதிரடி காட்டினார்.