Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ்: சீனா, சிங்கப்பூரிலிருந்து வந்த 6 பேர் தனி வார்டில் கண்காணிப்பு

சீனா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஆறு பேர் அரசு மருத்துவமனைகளில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, சீனா உள்பட வைரஸ் தாக்கம் உள்ள ஏழு நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மருத்துவக் குழுவால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் அடிப்படையில் சீனாவிலிருந்து வந்த பெண் மருத்துவர் உள்ளிட்ட இரண்டு பெண்கள், 47 வயதான சீன நாட்டவர் ஆகிய மூன்று பேரும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல், சிங்கப்பூரிலிருந்து திருச்சி திரும்பிய 27 வயது இளைஞர் திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தனி வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும் ராமநாதபுரத்திலும் ஒருவர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்.

தற்போது வரை, சீனாவில் இருந்து 799 பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்களில் தமிழ்நாட்டிற்கு வந்த ஆறு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தால் தனி வார்டில் வைத்து தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் இருந்து மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். மீதமுள்ள 793 பேரும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |