Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது… 377 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,565 ஆக உயர்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் 11,439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 377ஆக அதிகரித்துள்ள நிலையில் 1,306 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா காணொளியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Categories

Tech |