Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.18 லட்சமாக அதிகரிப்பு – 3,583 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,12,359லிருந்து 1,18,447ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 148 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,849 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 48,534ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,583ஆக ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 66,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41,642 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,454 உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 13,967 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் – 12,905, டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை 4ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

Categories

Tech |