இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 265 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,971 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 86,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 26,997 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,098 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு 4ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் ஊரடங்கு முடியவடைய உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் பாதிப்புகள் அதிகம் உள்ள 13 நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.