Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றைய நிலவரப்படி 85ஆக இருந்தவர்கள் எண்ணிக்கையானது இன்று 107ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. டெல்லி, கேரளா, கர்நாடகா, தமிழக மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர். முக்கிய விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டு, அனைத்து எல்லைகளிலும் பரிசோதனை செய்தே அனைவரும் வரவழைக்கப்படுகின்றனர். எனினும் இதனை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

Categories

Tech |