இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும்கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மொபைல்போன்களுக்கு காலர் டியூன் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் நடவடிக்கையை சுகாதார துறை மேற்கொண்டுள்ளது.
Sanjeeva Kumar, Special Secretary (Health), Union Health Ministry: Total 42 positive cases for #CoronaVirus have been reported till now. pic.twitter.com/wJOmZEEu2m
— ANI (@ANI) March 9, 2020
மேலும் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் 01123978046 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ரத்த பரிசோதனையில் 42 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தகவல் அளித்துள்ளார்.