Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: கர்நாடகாவில் 7,8,9-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.

இந்தியாவில் டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 107 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் உயிரிழந்துள்ளனர்.

இதைதொடர்ந்து,  கர்நாடக மாநிலம் முழுவதும் ஒரு வார காலம்  வணிக வளாகங்கள், தியேட்டர்கள், இரவு நேர விடுதிகள், கேளிக்கை விடுதிகளை மூட வேண்டும் என்று நேற்று முன்தினம் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டு இருந்தார்.மேலும் திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், மற்றும் பொது நிகழ்ச்சி நடத்துவதற்கும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளின் தேர்வுகளை  மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

Categories

Tech |