பன்றி காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய WHO தலைவர் டெட்ரோஸ், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க 18 மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.
சீனாவில் முதன்முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா,ஸ்பெயின், இத்தாலி, ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தோற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 19 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 19 லட்சத்து 23 ஆயிரத்து 858 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 4 லட்சத்து 44 ஆயிரத்து 17 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அளித்த பேட்டியில், 2009ல் பரவிய பன்றி காய்ச்சலை விட ஆபத்தானது இந்த கொரோனா வைரஸ் என கூறியுள்ளார்.
கொரோனா பரவித்தலை முற்றிலும் நிறுத்த ஒரு தடுப்பூசி அவசியம் என்று குறிப்பிட்ட அவர், அதற்கு 12 முதல் 18 மாதங்கள் கால அவகாசம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராக வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பு மருத்துத்துறை வல்லுநர் சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியியல் துறை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதனை மனிதர்கள் மீது பரிசோதிக்க பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்த சோதனைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஆக்ஸ்போர்டு பலக்லைக்கழகம் கூறியுள்ளது.