ஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகை பற்றி பேசும் போது, நாமும் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வைரஸுக்கு எதிரான தடுப்பு வழிகாட்டுதல்கள் நடத்தை மாற்றங்களாக செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த காலகட்டத்தில் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவதிலும், செய்யக்கூடாதவைகளை புறக்கணிக்கவும் வேண்டும்.
அவ்வாறு செய்வதன் காரணமாக கொரோனா பாதிப்பு நாட்டில் உச்சமடைவதை தவிர்க்க முடியும். தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் செயல்முறைகளைப் பின்பற்றாவிட்டால் கட்டாயமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார். நாட்டில் கடந்த 28 நாட்களாக சுமார் 42 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், 1,273 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, 16,540 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், நாடு முழுவதும் தற்போது மீட்பு விகிதம் 29.36% ஆக அதிகரித்துள்ளது.