சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்ற 3,675 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் 3,403 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 2938 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 53 பேர் புதிதாக கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 465 பேர் சிகிச்சையில் உள்ளனர் . அதே போல் வடசென்னை பகுதி மக்களுக்காக சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 901 கொரோன நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் 737 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். தற்போது 164 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.