Categories
Uncategorized

கொரோனாவுக்கு மருத்துவர் பலி: சிகிச்சை சரியில்லையென ஆடியோ வெளியிட்டவர்…..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காததால் இரண்டு தினங்களில் உயிர் இழந்துவிடுவேன் என ஆடியோவை வெளியிட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் சாந்திலால் கடந்த பத்தாம் தேதி மூச்சுத்திணறல் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர். அங்கு தனக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து மூச்சு திணறல் இருந்து வருவதாகவும் ஆனால் ஆக்சிஜன் கூட சரிவர வழங்கப்படாததால் இரண்டு நாட்களில் இறந்து விடுவேன் என்றும் உருக்கமாகப் பேசி அவர் வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சாந்திலால் உடல் மதுரை தத்தநேரி மின்மயானத்தில் அரசு சார்பில் இன்று தகனம் செய்யப்பட்டது ராஜபாளையத்தில் 40 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்ததுடன் சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு உதவி செய்து வந்த மருத்துவர் சாந்திலாலுக்கு  பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Categories

Tech |