தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இது குறித்து சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் , தமிழகத்தில் கொரோனா சந்தேகம் உள்ள 1,137 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.கோரோனா பாதிப்புள்ள நபருக்கு 2 நாட்களாக காய்ச்சல் இல்லாததால் விரைவில் வீடு திரும்புவார்.பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மத்திய அரசின் அறிவுறுத்தல் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 72 ரத்த மாதிரிகள் எடுத்தலில் 61 மாதிரிகளின் முடிவில் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதியாகியுள்ளது. இன்னும் 11 ரத்த மாதிரி சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்
கொரோனா நோயாளியை எப்படி அணுக வேண்டும் என்று தனியார் மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரோனா இல்லை. நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கக்கூடிய மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என ஆயுஷ் அறிவுறுத்தியுள்ளது.