உலகையே அச்சுறுத்தி உலா வந்துகொண்டிருக்கும் கொடிய கொரானா வைரஸ். அப்படினா என்ன ? எப்படி வந்தது ? ஏன் ? இப்படியெல்லாம் உலகமே யோசித்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது அது குறித்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நோய் குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓலை சுவடிகளில் சித்தர்களால் கூறப்பட்டுள்ளது . என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? ஆம் …உண்மை..!
இப்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி சித்தர் பாடலில் எழுதப்பட்டுள்ளது. அதாவது தேவர்களும் அசுரர்களும் பாம்பை இரு பக்கமும் இழுத்தார்கள். அப்போது பாம்பு விஷத்தைக் கக்கியது. உண்மையில் அது விசமில்லை கொரோனா வைரஸ். அந்த வைரசை சிவன் விழுங்கினார்.
அதுதான் அவரின் தொண்டைப் பகுதி நீலமாகியது. இப்போது கொரோனா வைரஸ் தாக்கி இறப்பவர்களும் நீலமாகியே இறக்கிறார்களாம். அதை அறிந்துதான் மக்களைக் காக்க சிவன் பாம்பை கழுத்திலே அணிந்து தெய்வ அந்தஸ்துக் கொடுத்து பாம்பை உண்ணாமல் வழிபடுங்கள் என்றாராம்.
ஓலைச்சுவடியில் கொரோனா சீனாவில் பாம்பு கறியை சமைக்காமல் சாப்பிட்டவரிடம் இருந்துதான் இந்த வைரசே பரவியது என்று சொல்கின்றனர். இதை அகத்தியர் கூட ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார்.
“சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு
கர்ப்பமறியா கன்னியும்
வாயு பகவான் பகைகொண்டு
பித்தம் சித்தம் சிதைகொள்வாள்”
இதன் அர்த்தம் சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் ஒன்று சேர்ந்து தாக்கியதுபோல கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் பாதிக்கப்பட்டு, பிறகு பித்தம் அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை பாதிக்கப்பட்டு இறப்பார்கள் என்று கூறியிருக்கிறார் சித்தர்.