கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் 7447 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 643 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 239 உயிரிழப்புகளை சந்தித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1574 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு 110 பேர் மரணமடைந்துள்ளனர்.
அதேபோல நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது அந்த வகையில் புதுச்சேரியில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மஹே பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவர் பலியாகியுள்ளார். புதுவையில் 8 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ஒருவர் குணமடைந்துள்ளனர்.