தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவால் பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டதை பொறுத்தவரை 104 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் நேற்று வரை கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 வயதான நபர் தஞ்சை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்கள் உயிரிழப்பு விகிதம் குறைவாகவே இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பு சற்று உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் கொரோனோவால் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்த பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.