இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.
இந்தியாவில் 39,311 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு 1,319 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல 10,731 பேர் குணமடைந்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தாலும், கொரோனாவின் வீரியம் குறையாமல் இருப்பது மக்களை அதிகபட்சமாக வர்த்தக நகரான மகாராஷ்டிராவில் 12,296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதில் 521 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் முன்னாள் நீதிபதியும், லோக்பால் அமைப்பின் உறுப்பினருமான திரிபாதி கொரோனவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர்.