Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு மருத்துவர், 8 காவலர்கள் உட்பட 26 பேருக்கு கொரோனா: சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவும் தொற்று!

தற்போது கிடைத்த தகவலின் படி, ஒரு பயிற்சி மருத்துவர், 8 காவல் அதிகாரிகள் உட்பட சென்னையின் பல்வேறு இடங்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.பி.சத்திரம், கீழ்பாக்கம், புதுப்பேட்டை, மாம்பலம் காவலர்கள் குடியிருப்பில் தலா ஒருவருக்கு கொரோனா தோற்று இன்று உறுதியாகியுள்ளது. ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கு முதன்முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் காவல் அதிகாரிக்கு ஏற்பட்ட முதல் கொரோனா தொற்று இதுதான்.

இதையடுத்து வரிசையாக காவல் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளருக்கு கொரோனா யிருப்பது உறுதி செய்யப்பட்டது. மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள், காவலர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மட்டுமே. இதன் காரணமாக தான் காவலர்களுக்கு தொற்று ஏற்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதேபோல, சென்னை வேப்பேரி தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியது.

* சென்னை பெரியமேட்டில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே தெருவை சேர்ந்த 7 பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தெருவை சீல் வைத்து, அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

* சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையை சேர்ந்த பயிற்சி மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இதேபோன்று, சென்னை புரசைவாக்கம் பிஷப் சந்து தெருவில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |