Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி… உச்சமைடையும் எண்ணிக்கை..!!

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 30 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து காய்கறி வியாபாரிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனையில் செய்து கொண்ட 5 காய்கறி வியாபாரிகள் மாயமடைந்துள்ளனர்.

நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 184 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், நேற்று மட்டும் 26 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 49 பேர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 131 நோயாளிகள் காரோணவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215- ஆக அதிகரித்துள்ளது. அதில் 80 பேர் காய்கறி வியாபாரிகள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கிக்கொண்டு செங்கல்பட்டு வரும் வியாபாரிகள் 670 தற்போது வரை அடையாளம் காணப்பட்டனர்.

அதில் தற்போதுவரை 550 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமே கோயம்பேடு மார்க்கெட் காரணமாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய அனைத்து வியாபாரிகள் மற்றும் ஊழியர்களை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |