டெல்லியில் தமிழ்நாடு ஊழியர் இல்லத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இரண்டு தமிழ்நாடு ஊழியர் இல்லம் உள்ளது. இதில் உள்ள ஒரு இல்லத்தில் அக்கவுண்ட் துறையில் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அந்த நபர் டெல்லியில் இருந்து திருநெல்வேலி சென்ற சிறப்பு ரயிலில் பயணித்துள்ளார். இந்த ரயிலில் இருப்பவர்களுக்கு திருச்சியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த தகவல் டெல்லியில் தமிழ்நாடு ஊழியர் இல்லத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு இருக்கும் இரண்டு இல்லங்களும் மூடப்பட்டுள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இல்லம் முழுவதும் கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்து பின்னர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் வந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி சென்றடைந்துள்ளது. இதனை தொடர்ந்த அந்த நபர் மற்றும் அவருடன் பயணித்த நபர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தகவல் அளித்துள்ள்ளனர் .