Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆளுநர் மாளிகையில் தீயணைப்பு துறை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஆளுநர் மாளிகையில் தீயணைப்புத் துறை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 வயதான தீயணைப்பு வீரருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ராஜபவன் வளாகத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் போன்று தீயணைப்பு துறை வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளுக்கு செல்வதால் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகிவருகிறது. ஏற்கனவே 15 பேருக்கு மேற்பட்ட வீரர்களுக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் உள்ள தீயணைப்பு நிலையம் செய்யப்பட்டு வருகிறது.

அவர்கள் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அங்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற தீயணைப்பு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடி பரிசோதனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |