தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது மக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்தது.
தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி உயிரிழந்தார். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்த நிலையில், 7 பேர் குணமடைந்துள்ளனர்.