தமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் குணமடைந்துள்ளனர். இதனை மிகவும் மகிழ்ச்சியளிக்க கூடிய தகவலாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த இருவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் குணமடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.டிஸ்சார்ஜ் செய்யப்படம் இவர்கள் 14 நாட்கள் தனிப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
#update: 2 Pts US return admitted at #RGGH for #Covid_19 +ve, from Porur is discharged from hospital today.They have recovered from d illness & tested negative twice.They will be home quarantined for next 14 days. I appreciate the Dean & team who took care of d Pts. @MoHFW_INDIA
— Dr C Vijayabaskar – Say No To Drugs & DMK (@Vijayabaskarofl) March 29, 2020