தமிழத்தில் டெல்லி சென்று திரும்பியவர்கள் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
எனினும் இவர்கள் 6 பெரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவிற்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் எந்த நோயாளியும் வென்டிலேட்டர் கருவியில் வைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாதக் குழந்தை நலமாக உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது என தகவல் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் தனி சிகிச்சை மையம் உருவாக்கப்படும். ஒரு புறம் கொரோனா தடுப்பு பணியும் மறுபுறம் அதை எதிர்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனோவுக்கு சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்த மத்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது. அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.