Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனாவிற்கு மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழந்துள்ளர்.

சென்னையில் கொரோனாவிற்கு மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். 45 வயதான ஊழியருக்கு 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உயிரிழந்த சுகாதார ஊழியர் மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று காலை 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார்.

இதேபோல சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 56 வயது பெண் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் 3வது ஒருவர் சென்னையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |