Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு… தமிழகத்தில் பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு …!!

சென்னையில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூய்மைப் பணியாளர் உயிரிழந்திருக்கின்றார்.

சென்னையின் கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளருக்கு சக பணியாளர்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஏழாம் தேதி மதியம் தான் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதிலிருந்து நல்ல உடல் நலத்துடன் தான் இருந்திருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவருக்கும் எவ்வித கொரோனா அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை என்பது 45 ஆக அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும்  30 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |