தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த மருத்துவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததநிலையில் தற்போது சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் மருத்துவர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இந்த நிலையில் தற்போது இந்த செய்தி என்பது வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தநிலையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் முதல் முறையாக உயிரிழக்கிறார். இதுவரைக்கும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 15 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது.
உயிரிழந்த மருத்துவர் கீழ்ப்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். அவரும் அவருடைய மகளும் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் உடல்நிலை நன்றாக இருக்கும் நிலையில் 60 வயதான மருத்துவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவருக்கு கடந்த 5 நாட்களாக வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.