சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
சிவகங்கையில் இதுவரை கொரோனா வைரஸால் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 10 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று வரை சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் கூட பலியாகாத நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் பதற்றம் நிலவியது. உயிரிழந்தவரை உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்யும் பணியில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை 303 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பித்தக்கது.