சென்னையில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 33,819 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் சிஎம்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தை இயங்குவது குறித்து சிஎம்டிஏ சார்பில் ஆலோசனை நடைபெற்றிருந்த நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரில் இறைச்சிக் கடை வைத்திருப்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையை அடுத்த குன்றத்தூரில் 2 வார குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.