Categories
மாநில செய்திகள்

கொரோனவால் உயிரிழந்த காவல் ஆய்வாளருக்கு இன்று மாலை மவுன அஞ்சலி… காவல்துறை..!!

கொரோனவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு இன்று மாலை 5 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து காவல் துறையினரும் பணி இடத்தில் இருந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலா முரளி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ள முதல் காவல் அதிகாரி இவர் ஆவார்.

இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூத்த மருத்துவர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. மூச்சு திணறல் ஏற்பட்டதால் செயற்கை முறையில் சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரது உயிர் பிரிந்தது. இந்த நிலையில் இவரது திருஉருவ படத்திற்கு சென்னை மாம்பலம் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மலர்தூவி மரியாதையை செலுத்தினர். இதையடுத்து, தமிழக முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் இன்று மாலை 5 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |