Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர்… சென்னை மாநகராட்சி ஆணையர்..!!

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதில்,

1. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் உயர்ரக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்,

2. குறைந்த அறிகுறிகளோடு மருத்துவ வசதி தேவைப்படுபவர்கள் கோவிட் ஹெல்த் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

3. அறிகுறி இல்லாமல் மிக குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்கள் கோவிட் கேர் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

4. அறிகுறிகள் குறைவாக இருந்து வீட்டில் வசதி உள்ளவர்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 5வது நாளாக நடைமுறையில் உள்ளது.

சென்னையில் நேற்று 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 623 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 23,756 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா பாதித்தவர்களை 4 வகையாக பிரித்து சிகிச்சை வழங்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

Categories

Tech |