Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை.. சீனா வெளியிட்ட தகவல்..!!

சீனாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், அதன் பின்பு படிப்படியாக உலக நாடுகளில் பரவ தொடங்கியது. எனினும் சீனா கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட்டது. அதன்பின்பு, தடுப்பூசி செலுத்தும் பணி, உலக நாடுகளில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இதனால், பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று குறைந்து மக்கள், இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில், அங்கு 49 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனினும், கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |