சென்னையில் இன்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,132 பேர் ஆண்கள், 710 பேர் பெண்கள், ஒரு திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 28,652 ஆண்களும்,17,834 பெண்களும், 18 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 20,679 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 45 அரசு மற்றும் 34 தனியார் மையங்கள் என மொத்தம் 79 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று மட்டும் 18,403 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 7,29,002 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.