மார்ச் மாதத்தில் 60 சதவிகிதம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருவதால், அதனுடைய அச்சம் பொதுமக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், பொதுமக்களும் பயணங்களை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ரயில் பயணத்தை பயணிகள் விரும்பாமல் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தால் அதை ரத்து செய்தும் வந்துள்ளனர். அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் முன்பதிவு செய்த பயணிகள் 60 சதவீதம் பேர் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.