சீன நாட்டில் ஒரே நாளில் சுமார் 28,127 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டில் முதல் தடவையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக நாடுகளை கொரோனா தலைகீழாக புரட்டி போட்டது. கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது படிப்படியாக கொரோனா குறைந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சீனாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 29,095 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 28,127 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் 25,902 நபர்களுக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனினும் அதில் உயிரிழப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.