Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா விதிமுறைகள்.. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கட்டுப்பாடுகள்..!!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று  பரவத்தொடங்கியதால் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்கள் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை. அதன்படி ஒலிம்பிக் கிராமத்தில் பயிற்சியாளர்கள், வீரர்கள், அவர்களுக்கான காவலர்கள் மற்றும் கமிட்டியினர் போன்றோர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனினும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டும், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்திலும் கொரோனா பரவி வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக வந்த பதினாறு நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பயிற்சியாளருக்கும், வீரருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், நெதர்லாந்து  துடுப்பு படகு அணியினர்  தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள்.

Categories

Tech |