உலக தலைவர்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள தெற்கு ஆப்பிரிக்காவின் பிரதமர் Ambrose Dlamini கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Valery Giscard d’Estaining உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று உலகத் தலைவர்கள் கொரோனோ பாதிப்பால் உயிரிழப்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் ஸ்விஸ் மாகாணத்தின் முன்னாள் ஜனாதிபதி Flaviyo cotti (81) என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் locarno வில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் நாட்டின் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.