கேரள மாநிலத்திற்கு தமிழக மக்கள் செல்ல வேண்டாமென சுகாதாரதுறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக-கேரள எல்லைகளில் உள்ள மக்கள் அவ்வப்போது தேவைக்காக அண்டை மாநிலமான கேரளா சென்று வருகின்றன. இந்தியாவிலேயே கொரோனோ தாக்கம் சற்று அதிகமாக இருக்கக் கூடிய மாநிலம் கேரளா. ஆகவே மக்களை அம்மாநிலத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதோடு,
கேரள கர்நாடக எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் சென்று வருவதாக வந்த தகவலை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள மக்களிடம் தயவுசெய்து கேரள பகுதிகளுக்கு சென்று வர வேண்டாம் என்றும், முடிந்த அளவு கவனத்துடன் செயல்படுங்கள் என்றும் கூறியதோடு இது குறித்த விழிப்புணர்வையும் தொடர்ந்து அப்பகுதி கிராம மற்றும் மலைவாழ் மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன.