தென் கொரியாவில் ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவில் சமீபத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் சீனாவில் 5280 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவை அடுத்து தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக நான்கு லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதுபற்றி தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, ஒரே நாளில் 4 லட்சத்து 741 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் முதல் தடவையாக பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கையைவிட அதிகம் என்று தெரிவித்திருக்கிறது.