சீன நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
சீன நாட்டில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து பல நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்களில் மக்களுக்கு தீவிர பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் அரசு, சீன நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
இது பற்றி அந்நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா தெரிவித்திருப்பதாவது, வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து சீன நாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அறிகுறி இருந்தாலோ அல்லது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலோ குறிப்பிட்ட நபர் தனிமைப்படுத்தப்படுவார் என்று கூறியிருக்கிறார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து விடாமல் இருக்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.