சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் இதுவரை 58 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
துரையில் இதுவரை 231 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை 17,082 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதமும் உயர்ந்து வருவது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,731ஆக அதிகரித்துள்ளது. நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கோவை ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அதேபோல வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை, பெரும்பலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சற்று மீண்டு வருகின்றது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர், சேலத்தில் 13 பேர், மதுரையில் 19 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.